/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீ விபத்தில் பாதித்தோருக்கு எம்.எல்.ஏ., - மேயர் உதவி
/
தீ விபத்தில் பாதித்தோருக்கு எம்.எல்.ஏ., - மேயர் உதவி
தீ விபத்தில் பாதித்தோருக்கு எம்.எல்.ஏ., - மேயர் உதவி
தீ விபத்தில் பாதித்தோருக்கு எம்.எல்.ஏ., - மேயர் உதவி
ADDED : ஜூலை 10, 2025 11:23 PM
திருப்பூர்; திருப்பூரில் நடந்த தீ விபத்தில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு தெற்கு எம்.எல்.ஏ., மற்றும் மேயர் இருவரும் தங்கள் சொந்த பணத்தில் நிதியுதவி வழங்கினார்.
திருப்பூர் மாநகராட்சி, கல்லம்பாளையம் - எம்.ஜி.ஆர்., நகரில் நேற்று முன்தினம் ஒரு வீட்டில் காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால், அடுத்தடுத்து பரவிய தீயால், 42 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. அந்த வீடுகளில் வசித்த குடும்பத்தினர் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து நடந்த இடத்தில் நேற்று முன்தினம் எம்.பி., சுப்பராயன், எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் பார்வையிட்டனர்.
நேற்று காலை திருமண மண்டபத்துக்கு சென்ற தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா, 10 ஆயிரம் ரூபாயும், மேயர் தினேஷ்குமார் தலா 5 ஆயிரம் ரூபாயும் வழங்கினார். பாதிப்பட்டோருக்கு, அரசு தரப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைக்கு எம்.எல்.ஏ., மற்றும் மேயர் ஆகியோர் பரிந்துரைத்தனர்.