/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்காளர் பட்டியல் திருத்தம்: எம்.எல்.ஏ., வேண்டுகோள்
/
வாக்காளர் பட்டியல் திருத்தம்: எம்.எல்.ஏ., வேண்டுகோள்
வாக்காளர் பட்டியல் திருத்தம்: எம்.எல்.ஏ., வேண்டுகோள்
வாக்காளர் பட்டியல் திருத்தம்: எம்.எல்.ஏ., வேண்டுகோள்
ADDED : நவ 08, 2025 11:40 PM
திருப்பூர்: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து கலெக்டரிடம் தெற்கு எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகம் முழுவதும் தேர்தல் கமிஷன் உத்தரவின் பேரில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர் திருத்தப் பணிகள் துவங்கியுள்ளன. அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளிலும் இப்பணி மும்முரமாகத் துவங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில், திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் தொகுதிகளில் இப்பணிக்கான படிவங்கள் முழுமையாக பி.எல்.ஓ.,க்களுக்கு வந்து சேரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்கு எம்.எல்.ஏ. செல்வராஜ் வேண்டுகோள் விடுத்தார்.
இது குறித்து மாவட்ட தேர்தல் வாக்காளர் பதிவு அலுவலரான கலெக்டர் மனிஷ் நாரணவரேவைச் சந்தித்த அவர் கோரிக்கை மனுவை அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் தேவையான படிவங்கள் உடனடியாக அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

