/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கலுக்கு கைகொடுக்கும் மொச்சை: விவசாயிகள் நம்பிக்கை
/
பொங்கலுக்கு கைகொடுக்கும் மொச்சை: விவசாயிகள் நம்பிக்கை
பொங்கலுக்கு கைகொடுக்கும் மொச்சை: விவசாயிகள் நம்பிக்கை
பொங்கலுக்கு கைகொடுக்கும் மொச்சை: விவசாயிகள் நம்பிக்கை
ADDED : டிச 13, 2024 08:10 PM
உடுமலை; உடுமலை ஜல்லிபட்டி, லிங்கம்மாவூர், கொங்குரார்குட்டை, வெள்ளைப்பாறை உட்பட மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் மானாவாரியாக மொச்சை பயிரிடப்படுகிறது. வடகிழக்கு பருவமழையை அடிப்படையாக கொண்டு, மொச்சை சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது பயிரிடப்பட்டுள்ள, மொச்சை பொங்கல் பண்டிகைக்கு விற்பனைக்கு தயாராகும். பொங்கல் பண்டிகை உணவில், முக்கிய இடம் பிடிப்பதால், மொச்சைக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், விவசாயிகள் உள்ளனர்.
மானாவாரியாக மட்டுமல்லாது, தென்னையில் ஊடுபயிராகவும் இந்தாண்டு விவசாயிகள் மொச்சை பயிரிட்டுள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: ஆண்டுக்கு ஒரு முறை பருவமழையை அடிப்படையாக கொண்டு, மொச்சை பயிரிடுகிறோம். பொங்கல் பண்டிகையின் போது, பச்சையாக மொச்சை காய்கள் அறுவடை செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படும்.
ஆனால், இப்பகுதி விவசாயிகள், காய்ந்த மொச்சையை அறுவடை செய்து இருப்பு வைத்து விற்பனை செய்து வருகிறோம். பனிப்பொழிவு காரணமாக, பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்பட்டு, மருந்து தெளிக்க வேண்டியுள்ளது.
இதனால், ஏக்கருக்கு சாகுபடி செலவு 20 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. மொச்சையை இருப்பு வைக்கும் விவசாயிகளுக்கு, அரசு, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக பொருளீட்டு கடன் வழங்க வேண்டும்.
அப்போதுதான், விலை வீழ்ச்சி காலங்களில் மொச்சையை விவசாயிகள் இருப்பு வைக்க முடியும். இவ்வாறு, கூறினர்.