ADDED : ஜூலை 06, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
யங் இண்டியன்ஸ் அமைப்பு சார்பில், 'யங் இண்டியன்ஸ் பார்லிமென்ட்-2026' என்ற இருநாள் மாதிரி பார்லிமென்ட் நிகழ்ச்சி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாணவர்கள் கேள்வி நேரம், மசோதா விவாதம், வாக்கெடுப்பு உள்ளிட்ட பார்லிமென்ட் நடைமுறைகளில் பங்கேற்று, செயற்கை நுண்ணறிவு, நிதி அறிவாற்றல், மனநலம், தொழில்நுட்ப விவசாயம் உள்ளிட்ட தலைப்புகளில் விவாதித்தனர்.
சிறந்த பார்லிமென்ட் உறுப்பினர், சிறந்த பேச்சாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
