/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கண் துல்லிய பரிசோதனைக்கு நவீன கருவி
/
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கண் துல்லிய பரிசோதனைக்கு நவீன கருவி
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கண் துல்லிய பரிசோதனைக்கு நவீன கருவி
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கண் துல்லிய பரிசோதனைக்கு நவீன கருவி
ADDED : ஜூன் 22, 2025 11:34 PM

திருப்பூர: ''அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நீரிழிவு நோய் பாதிப்பு, அதனால் ஏற்படும் கண் பாதிப்பை துல்லியமாக அறிய, 1.80 கோடி ரூபாயில்,ஓ.சி.டி., என்ற அதிநவீன கருவி நிறுவப்பட்டுள்ளது'' என்று திருப்பூர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவு சிறப்பு மருத்துவர் சத்யா கூறினார்.
அவர் கூறியதாவது:
பொதுவாக ஆண்டுக்கு ஒருமுறை கண் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பலரும் அதை சரிவர செய்து கொள்வதில்லை. நீரிழிவு நோய் உள்ளவர்கள் உடனடியாக கண் டாக்டரை சந்தித்து விட வேண்டும்.
கருவிழி நோய் தெரியும் முன் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். பலரும் அவ்வாறு செய்வதில்லை.
ஆரம்பத்திலேயே சோதனை
நீரிழிவு நோய்க்கு மட்டும் மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்கின்றனர். அது மட்டும் போதாது. வீக்கம், ரத்த ஓட்டத்தில் மாற்றம் ஏற்படும் நிலை வரை காத்திருந்து, அதன் பின் வருகின்றனர். இது தவறு.
ஆரம்பத்திலேயே வந்தால் கண் பார்வையை மீட்டெடுக்கவும், காப்பாற்றவும் முடியும். கடைசி நேரத்தில் என்றால், அதற்கு தகுந்த அறுவை சிகிச்சைகளையும் மேற்கொள்ள வேண்டி வரும்.
' குளுக்கோமா' விழிப்புணர்வு
சமீபத்தில், நாற்பது முதல், 50 வயதை கடந்தவர்கள், நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவர்கள், விழித்திரை பிரச்னை தொடர்பாக மருத்துவர்களை சந்திக்க வருகின்ற னர்.
அவர்களுக்கு சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை அழிவு நோய் (குளுக்கோமா) குறித்து எடுத்துக் கூறப்படுகிறது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண் பாதிப்பை அலட்சியமாக விடாமல், முடிவுகள் தெரிந்து கொண்ட மறுநாளே கண் பரிசோதனை செய்து கொள்வது, கண் பார்வையை காப்பாற்றிக் கொள்ள உதவும். தொடர்சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டும்.
அலட்சியம் வேண்டாம்
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவில், நீரிழிவு நோயாளிகளுக்கு கண்சிகிச்சை தனிப்பிரிவு செயல்படுகிறது. லேசர், ஊசி வழியாக உடனடி அறுவை சிகிச்சைக்கான நவீன வசதிகளும் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில், 10 ஆயிரத்துக்கு அதிகமாக செலுத்தப்படும் ஊசி, நம் மருத்துவக் கல்லுாரியில் மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவில் இலவசமாக கிடைக்கிறது.
நம் மருத்துவமனையில், நீரிழிவு நோய் பாதிப்பு, அதனால் ஏற்படும் கண் பாதிப்பை துல்லியமாக அறிய, 1.80 கோடி ரூபாயில்,ஓ.சி.டி., என்ற அதிநவீன கருவி நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் கண் எப்படி உள்ளது என்பதை துல்லியமாக அறிந்து, அதற்கேற்ப சிகிச்சைகளை துவங்க முடியும். இலவசமாக ஸ்கேன் எடுக்கப்படுகிறது
இவ்வாறு, அவர் கூறினார்.