தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திருடியவர்களுக்கு நுாதன தண்டனை

 திருடியவர்களுக்கு நுாதன தண்டனை

 திருடியவர்களுக்கு நுாதன தண்டனை


ADDED : ஜூன் 14, 2026 09:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2026 09:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர், துவாரகை நகரை சேர்ந்த யுவராஜ் என்பவரின் மொபைல் போன் மற்றும் வாகனத்தை திருடிய ஷியாம் கிறிஸ்டோபர், 24 என்பவர், கடந்த 2023, ஏப். மாதம் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்ராஜா, ஷியாம் கிறிஸ்டோபருக்கு மூன்று ஆண்டு தண்டனையாக நன்னடத்தை அலுவலரின் கண்காணிப்பில் இருக்கவேண்டும் என, தீர்ப்பளித்தார். திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், விஜயலட்சுமி என்பவரின் வீட்டிலிருந்த நகைகளை திருடிச்சென்ற, 46 வயது பெண் ஒருவர், கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கு விசாரணையில், நகைகளை திருடிய பெண்ணுக்கு மூன்று ஆண்டு தண்டனையாக, நன்னடத்தை அலுவலரின் கண்காணிப்பில் இருக்கவேண்டும் என, நீதிபதி செந்தில்ராஜா தீர்ப்பளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us