ADDED : ஜூன் 14, 2026 09:10 AM
திருப்பூர்: தமிழக முதல்வர் விஜய்க்கு, திருப்பூர் மாவட்ட மா.கம்யூ. செயலாளர் மூர்த்தி, அனுப்பிய கடிதம்:
'குடிசை இல்லா தமிழகம்' என்ற நோக்கத்தில், வீடற்ற ஏழை, எளிய மற்றும் குடிசை வாழ் மக்களுக்கு தங்கள் சொந்த பட்டா நிலத்தில் கான்கிரீட் வீடு கட்டிக் கொள்ள 3.50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க 2024ல் தமிழக அரசு அறிவித்தது.
இத்திட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 300க்கும் மேற்பட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடு கட்ட பணி ஆணை மற்றும் நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டது.
பலரும் பெருமளவு பணியை முடித்து விட்டனர். நான்கு தவணையாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிதி இதுவரை முதல் தவணை கூட வழங்கப்படவில்லை.
பொருளாதார நிலையில் பின்தங்கிய இவர்கள் தற்போது மேலும் நெருக்கடியில் உள்ளனர். கட்டுமானம் நடக்கும் வீட்டில் வசிப்பதில் சிரமம் நிலவுகிறது. எனவே, முதல்வர் விஜய், இந்த நிதியை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
