/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி; 'கில்லாடி' பெண் கைது
/
அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி; 'கில்லாடி' பெண் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி; 'கில்லாடி' பெண் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி; 'கில்லாடி' பெண் கைது
ADDED : செப் 27, 2024 12:35 AM
திருப்பூர் : திருப்பூரில், அரசு வேலை வாங்கி தருவதாக பணம் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், கே.வி.ஆர்., நகர், கே.ஆர்.ஆர்., தோட்டத்தை சேர்ந்தவர் ஜான்சன், 50. இவரது அண்ணன் மகனுக்கு கூட்டுறவு சங்கத்தில் வேலை வாங்கி தருவதாக, அதே பகுதியை சேர்ந்த சோனியா, 40 என்பவர் கூறினார். இதை நம்பி, 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.
ஆனால், வேலை வாங்கி தராமல், ஏமாற்றும் நோக்கில் செயல்பட்டது தெரிந்தது. சென்ட்ரல் போலீசார் வழக்கு பதிந்து சோனியாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சோனியா, இதே பாணியில், கோவில்வழி மற்றும் அலகுமலையை சேர்ந்த சிலரிடம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.