/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீட்டில் பணம் திருட்டு; போலீசார் விசாரணை
/
வீட்டில் பணம் திருட்டு; போலீசார் விசாரணை
ADDED : செப் 20, 2025 08:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; ஊதியூரில் வீட்டின் மேற்கூரையைப் பிரித்து உள்ளே இறங்கி பணம் திருடப்பட்டது குறித்து விசாரணை நடக்கிறது.
ஊதியூர் அடுத்த நிழலிகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி, 70; விவசாயி. தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டைப் பூட்டி விட்டு, குண்டடத்தில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்றார். நேற்று மீண்டும் வீடு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் மேற்கூரை ஓடுகள் பிரிக்கப்பட்டுக் கிடந்தது. அதன் வழியாக உள்ளே இறங்கிய நபர், வீட்டு பீரோவிலிருந்த 25 ஆயிரம் ரூபாய் மற்றும் முக்கால் சவரன் நகையைத் திருடிச் சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.