/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் மங்கோலிய பறவை; வலசை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆச்சரியம்
/
திருப்பூரில் மங்கோலிய பறவை; வலசை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆச்சரியம்
திருப்பூரில் மங்கோலிய பறவை; வலசை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆச்சரியம்
திருப்பூரில் மங்கோலிய பறவை; வலசை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆச்சரியம்
ADDED : டிச 25, 2024 07:49 AM

திருப்பூர் : திருப்பூர் நகரில், பாசன நீர் தேவையை பூர்த்தி செய்யும் குளத்தில் மங்கோலிய பறவைகள் வலசை வருவது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளத்துக்கு ஆண்டுதோறும், அக்., முதல், மார்ச் வரை, வெளிநாட்டு பறவைகள் வலசை வருவது வழக்கம். பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இக்குளத்துக்கு ஆண்டுதோறும் ஏராளமான பறவைகள் வலசை வரும் நிலையில், ஏராளமான உள்ளூர் பறவைகளும் தங்களின் வாழ்விடமாக கொண்டுள்ளன.அந்த வகையில் தற்போது ரஷ்யா, மங்கோலியா நாடுகளை சேர்ந்த பட்டைத்தலை வாத்து, வரித்தலை வாத்து ஆகியவை மாணிக்காபுரம் குளத்துக்கு வலசை வருகின்றன.
இதுகுறித்து, திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:பறவைகள் சரணாலயமாக விளங்கும் நஞ்சராயன் குளத்துக்கு, குளிர்கால வலசையாக வெளிநாட்டு பறவைகள் வருவது வழக்கம்.
இதில், ரஷ்யா, மங்கோலியா, திபெத் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் பட்டைத்தலை வாத்து மற்றும் வரித்தலை வாத்து ஆகியவையும் ஆண்டுதோறும் வலசை வரும். கடந்த, நான்காண்டாக உள்ளூர் மக்களின் விவசாய நீர் பாசனத்துக்கு பயன்படும், மாணிக்காபுரம் குளத்துக்கும் இவ்வகை பறவைகள் வலசை செல்கின்றன.
அவை வலசை வருவதற்கான சூழல் நிலவுவதால், ஆண்டுதோறும் வலசை செல்கின்றன; சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்த விஷயம்.இவ்வாறு, அவர் கூறினார்.

