sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நொய்யலை தன்மை குறித்து ஆராய கண்காணிப்பு கருவி; மாசுக்கட்டுப்பாடு வாரியம் தகவல்: விவசாயிகள் மகிழ்ச்சி

/

நொய்யலை தன்மை குறித்து ஆராய கண்காணிப்பு கருவி; மாசுக்கட்டுப்பாடு வாரியம் தகவல்: விவசாயிகள் மகிழ்ச்சி

நொய்யலை தன்மை குறித்து ஆராய கண்காணிப்பு கருவி; மாசுக்கட்டுப்பாடு வாரியம் தகவல்: விவசாயிகள் மகிழ்ச்சி

நொய்யலை தன்மை குறித்து ஆராய கண்காணிப்பு கருவி; மாசுக்கட்டுப்பாடு வாரியம் தகவல்: விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : நவ 27, 2024 03:32 AM

Google News

ADDED : நவ 27, 2024 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; நொய்யலின் தன்மை குறித்து ஆராய கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக, மாசுக்கட்டுப்பாடு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் துவங்கும் நொய்யல் நதி, சாய ஆலைகள், தொழிற்சாலை கழிவுகள், மருத்துவ மற்றும் கட்டடக் கழிவுகள், உள்ளாட்சி அமைப்புகளின் கழிவுநீர் ஆகியவை கலந்து, கடுமையாக மாசடைந்து வருவதாக, நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளிக்கப்பட்டது.

புகார் மனுவை தொடர்ந்து, நொய்யலின் தன்மை குறித்து ஆராய, கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக, மாசுக்கட்டுப்பாடு வாரியம் பதில் அளித்துள்ளது.

அதில், 'தமிழகத்தில் உள்ள முக்கிய நதிகளில், நீரின் தன்மை குறித்து ஆராய கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு, நொய்யல் ஆற்றை கண்காணிக்க, மங்கலம், திருப்பூர், காசிபாளையம் மற்றும் ஒரத்துப்பாளையம் அணை பகுதிகளில் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை விரைவில் இயக்க நிலைக்கு வரும் பொழுது, நொய்யல் நீரின் தன்மை குறித்து உடனுக்குடன் காட்சிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,' என கூறியுள்ளது.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

இதேபோல், நொய்யலில் கழிவுநீர் கலக்காத வகையில், ஆற்றுப்படுகையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கருமத்தம்பட்டி நகராட்சி நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

இது குறித்து நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம் கூறியதாவது:

நொய்யல் நதியில் பல்வேறு கழிவுகள், குப்பைகள் கலப்பதால், நதிநீர் மாசடைந்து, நொய்யலைச் சுற்றி உள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு, நொய்யலில் கழிவுகள் கலப்பது வெளிப்படையாகத் தெரிந்தும், நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள், சப்பை காரணங்களை கூறி வருகின்றனர். கண்காணிப்பு கருவி பொருத்தியதும், மாசுக்கட்டுப்பாடு வாரியம், கழிவுகள் கலப்பதை தடுத்து விடுமா? இதேபோல், நொய்யல் நதிக்கரையில் மலை போல் குப்பையை குவித்து வைத்துள்ள கருமத்தம்பட்டி நகராட்சி,

கழிவு நீரை சுத்திகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி வருகிறது. இத்தனை காலமாக, கழிவுகள், குப்பைகளை நொய்யலில் சேர்த்ததற்கு நகராட்சி என்ன பதில் கூறப்போகிறது? இதற்கிடையே , சாமளாபுரம் பேரூராட்சியும் தனது பங்குக்கு குப்பைகள், கழிவுகளை நொய்யலில் கலந்து விட, இவற்றுக்கெல்லாம் அதிகாரிகள் என்ன தீர்வு காணப் போகிறார்கள். எனவே, அதிகாரிகள் கூறியுள்ளது பதில் மட்டுமே; நடவடிக்கை அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us