/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலாளி குடும்பத்தினருக்கு மாதம்தோறும் ஓய்வூதியம்
/
தொழிலாளி குடும்பத்தினருக்கு மாதம்தோறும் ஓய்வூதியம்
தொழிலாளி குடும்பத்தினருக்கு மாதம்தோறும் ஓய்வூதியம்
தொழிலாளி குடும்பத்தினருக்கு மாதம்தோறும் ஓய்வூதியம்
ADDED : ஜூன் 29, 2025 12:53 AM

பல்லடம் ' திருமுருகன்பூண்டியை சேர்ந்தவர் ஸ்ரீராம் செல்வராஜ், 27. பல்லடம் அடுத்த, குங்குமபாளையம் பிரிவில் உள்ள கார் ஷோரூம் ஒன்றில் விற்பனை ஆலோசகராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த, ஏப்., 25ல், பணி நிமித்தமாக அவிநாசி செல்லும்போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். இ.எஸ்.ஐ., காப்பீட்டாளரான இவர், பணியின் போது உயிரிழந்ததை கருத்தில் கொண்டு, இ.எஸ்.ஐ., நிர்வாகம் இவரது குடும்பத்தினருக்கு காப்பீட்டு பயன் கிடைக்க ஏற்பாடு செய்தது.
இவரது மனைவி பவித்ரா, 27, மகன் ருஜித், 4 ஆகியோருக்கு மாதம் தோறும் ஓய்வூதியமாக, 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஆணை மற்றும் காசோலையை, பல்லடம் இ.எஸ்.ஐ., கிளை மேலாளர் ராஜா, குடும்பத்தினரிடம் வழங்கினார்.
இத்துடன், உதவிப்பயன் தொகையாக, 36 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. இ.எஸ்.ஐ., காசாளர் ஜெயக்குமார், அலுவலர் சவுந்தர் பங்கேற்றனர்.