ADDED : ஆக 20, 2025 01:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூரில், மறைந்த த.மா.கா., தலைவர் மூப்பனாரின், 94வது பிறந்த நாள் விழா நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார்.
மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் சேதுபதி, மாநில செயற்குழு உறுப்பினர் செழியன், கொ.ப.செ., தனசேகர், கொங்கு மண்டல சிறுபான்மை பிரிவு தலைவர் அப்துல் கலாம் ஆசாத் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, பூண்டியில் உள்ள மூப்பனார் சிலைக்கு மாலை அணிவித்து, அன்னதானம் வழங்கப்பட்டது.
மாவட்ட துணைத் தலைவர் முருகேஷ் மாவட்ட பொதுச் செயலாளர் சுப்ரமணி மணிமுத்து மாவட்ட செயலாளர் சேதுராம், சிற்பி குமாரவேல் ஆகியோர் பங்கேற்றனர்.