ADDED : டிச 27, 2024 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊராட்சி தலைவர்கள், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் அலகுமலையில் நடந்தது.
பல்லடம் டி.எஸ்.பி., சுரேஷ் பேசுகையில், ''சேமலைக்கவுண்டம்பாளையம் மூவர் கொலை வழக்கில் சந்தேக நபர்களை விசாரிக்கிறோம். வாய்க்கால் பகுதியில் போலீசார் துப்பாக்கியுடன் ரோந்து செல்கின்றனர். தனி நபர்கள் வீடு, தோட்டங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துகின்றனர். விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இன்னும் கூடுதல் விழிப்புணர்வு தேவை. பொது இடங்களில் தனியார் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமரா பொருத்துகிறோம். போதைப்பொருள் விற்பனை மற்றும் சந்தேக நபர்கள் தென்பட்டால் போலீசாருக்கு தகவல் கொடுங்கள்'' என்றார்.

