/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வரும் நாட்களில் இன்னும் சுடும்'
/
'வரும் நாட்களில் இன்னும் சுடும்'
ADDED : மார் 29, 2024 01:54 AM
திருப்பூர்:'திருப்பூரில், பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை, ஒரு சதவீதம் அதிகரிக்கும்' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு
வேளாண்மை பல்கலைக்கழகம், இந்திய வானிலைத்துறை சார்பில்
வெளியிடப்பட்டுள்ள, திருப்பூர் மாவட்டத்தின் வாரந்திர காலநிலை
நிலவரம்:_திருப்பூரில் வரும் 30ம் தேதி வரை, பகல் நேர வெப்பநிலை, 36
டிகிரி செல்சியஸ் முதல், 37 டிகிரி செல்சியஸ் வரையும்; குறைந்தபட்ச
வெப்பநிலை, 22 முதல், 24 டிகிரி செல்சியசாகவும் இருக்கும். காலை நேர
காற்றின் ஈரப்பதம், 70 சதவீதம்; மாலை நேர காற்றின் ஈரப்பதம், 20
சதவீதமாக இருக்கும்.
மணிக்கு, 8 முதல், 10 கி.மீ., வேகத்தில் காற்று
வீசக்கூடும். காற்று, பெரும்பாலும் தென் கிழக்கு திசையில் இருந்து
வீசக்கூடும். பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை, சராசரியை விட, ஒரு
சதவீதம் உயர வாய்ப்புண்டு. அடுத்து வரும் நாட்களில், வறண்ட வானிலையே
காணப்படும்.
நீர் பாசனம் குறைந்தளவு உள்ள இடங்களில், மண் மூடாக்கு
அமைக்க வேண்டும்.
கோடைக்காலத்தில் பெறப்படும் மழைநீரை, வேர் பகுதியில்
சேமித்து, மரத்தை சுற்றிலும் பாத்தியை, உள்நோக்கி சாய்வாக
ஆழப்படுத்த வேண்டும். பகல் நேர வெப்பநிலை உயர்ந்து காணப்படுவதால்,
கால்நடை மற்றும் கோழிகளுக்கு போதுமான அளவு சுத்தமான குடிநீர் வழங்க
வேண்டும், கால்நடை குடில்களை சுற்றிலும் ஈரமான சாக்குகளை தொங்க விட
வேண்டும்.கால்நடைகளை வெயில் நேரத்தில் மேய்ச்சலுக்கு விட வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

