/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊத்துக்குளியில் அதிகம்; உடுமலையில் குறைவு
/
ஊத்துக்குளியில் அதிகம்; உடுமலையில் குறைவு
ADDED : அக் 16, 2024 12:34 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், சராசரியாக 30.62 மி.மீ., மழை பதிவானது. 15 இடங்களில் மிதமான மழையும்; ஐந்து இடங்களில் லேசான மழையாக பதிவாகியுள்ளது.
ஊத்துக்குளி - 59 மி.மீ., வட்டமலைக்கரை ஓடை - 56.40, திருப்பூர் - அவிநாசி ரோடு கலெக்டர் முகாம் அலுவலக பகுதி - 55, காங்கயம் - 54, உப்பாறு அணை - 50, வெள்ளகோவில் - 47, அவிநாசி - 40, மூலனுார் - 37, குண்டடம் - 37, திருப்பூர் தெற்கு தாலுகா பகுதி - 36, கலெக்டர் அலுவலக வளாக பகுதி - 30, வடக்கு தாலுகா அலுவலக பகுதி - 25, நல்லதங்காள் ஓடை - 25, தாராபுரம் - 19, பல்லடம் - 17 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
உடுமலை அமராவதி அணை - 6, உடுமலை - 5, திருமூர்த்தி அணை - 5, மடத்துக்குளம் - 5, திருமூர்த்தி அணை (ஐ.பி.,) - 4 மி.மீ.,க்கு லேசான மழை பெய்துள்ளது. திருப்பூர் நகர பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும்கூட, பகல் வேளைகளில் மழை பெய்வதில்லை. பெரும்பாலும் மாலை, 5:00 மணிக்குப் பின்னரும், இரவு வேளைகளிலுமே மழை பெய்வதால், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், தொழிலாளர்களுக்கு மழையால் எந்த சிரமமும் ஏற்படுவதில்லை.
மாலை நேரங்களில் துாறல் மழை பெய்யும்போது மட்டும், மழையில் நனைந்தபடியும், ஆங்காங்கே காத்திருந்து, மழை நின்றபின்னரும் மாணவர்கள் வீடுகளுக்கு செல்கின்றனர்.