ADDED : ஏப் 18, 2025 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்: பங்குனி மாதத்தில் முருங்கை சீசன் துவங்கியது. தேவைக்கு அதிகமான வரத்து இருந்ததால் முருங்கை விலை அதல பாதாளத்திற்குச் சரிந்தது. குறைந்தபட்சம் கிலோ இரண்டு ரூபாய்க்கு விலை போனது.
சித்திரை மாதம் துவங்கியதில் இருந்து முருங்கை வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. திருப்பூர் மார்க்கெட்டில் மர முருங்கை மூலனுார் ரகம் குறைந்தபட்சம் கிலோ, 20 ரூபாய்க்கும், செடி மற்றும் கரும்பு ரகங்கள், 30 முதல், 40 ரூபாய் வரை விலை போகிறது.

