ADDED : செப் 08, 2025 11:20 PM
திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. முருங்கை விளைச்சலுக்கு நல்ல வெயில் அவசியம்.
மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஆடி மாதத்தில் இருந்து மழை இல்லாமல் வறண்ட வானிலை நிலவுகிறது. இதனால் பூக்கள் அனைத்தும் காய்களாக மாறி உள்ளது. எனவே முருங்கை விளைச்சல் அமோகமாக உள்ளது. வடமாநிலங்களில் மழை வெளுத்து வாங்குவதால் பூக்கள் உதிர்ந்து, விளைச்சல் சரிந்துள்ளது.
தற்பொழுது திருமண முகூர்த்த சீசன் களைகட்டி உள்ளது. வெளியூர் தேவையும் அதிகரித்துள்ளது. முருங்கை நல்ல விளைச்சல் கிடைத்த போதிலும் தற்போது விலை ஏறுமுகமாக உள்ளது. தற்பொழுது செடி மற்றும் கரும்பு ரக முருங்கை கிலோ, 50 ரூபாய்க்கும், மர முருங்கை கிலோ, 35 ரூபாய்க்கும் விலை போகிறது. வரும் நாட்களில் முருங்கை விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இச்சூழலில், நல்ல விலை கிடைப்பதால் முருங்கை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.