/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நுகர்வோர் அமைப்பு தினம்; திருப்பூரில் கொண்டாட்டம்
/
நுகர்வோர் அமைப்பு தினம்; திருப்பூரில் கொண்டாட்டம்
ADDED : செப் 08, 2025 11:20 PM
திருப்பூர்; ஆண்டுதோறும் தேசிய அளவிலான நுகர்வோர் பேரமைப்பு சார்பில் தன்னார்வ நுகர்வோர் தினம் செப்., 6 ம் தேதி கொண்டாடப்படுகிறது.
திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் மண்டலங்களை உள்ளடக்கிய விழா, திருப்பூர் மக்கள் மாமன்ற அரங்கில் நடந்தது. நுகர்வோர் அமைப்பு தினம், திருப்பூர் மாவட்ட கூட்டமைப்பின் 3வது ஆண்டு விழா மற்றும் திருப்பூர் தாலுகா நுகர்வோர் மன்றத்தின் 30 வது ஆண்டு விழா ஆகியன நடந்தது.மாநில செயல் தலைவர் சிந்து சுப்ரமணியம் தலைமை வகித்தார். கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நல்லுார் நுகர்வோர் சங்க தலைவர் சண்முக சுந்தரம், கன்ஸ்யூமர் வாய்ஸ் அம்பலவாணன், மக்கள் மாமன்ற செயலாளர் ராஜா, திருப்பூர் மாவட்ட அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்ட அமைப்பு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.