/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முருங்கை வரத்து சரிவு; விலை ஏறுமுகம்
/
முருங்கை வரத்து சரிவு; விலை ஏறுமுகம்
ADDED : பிப் 03, 2025 11:21 PM
உடுமலை; வரத்து குறைந்துள்ளதால், உழவர் சந்தை உள்ளிட்ட சந்தைகளில், முருங்கையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உடுமலை சுற்றுப்பகுதியில் குறைந்த பரப்பிலேயே, முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், மூலனுார், கள்ளிமந்தையம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தே உடுமலை சந்தைகளுக்கு முருங்கை வரத்து உள்ளது.
பருவமழை சீசன் உள்ளிட்ட காரணங்களால், முருங்கை உற்பத்தி வெகுவாக பாதித்து, சந்தைக்கு வரத்து குறைந்து விட்டது. நேற்று உடுமலை உழவர் சந்தையில், கிலோ 90 - 100 ரூபாய் என முருங்கைக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
பிற சந்தைகளிலும் முருங்கை விலை அதிகரித்தே காணப்பட்டது. பருவமழை இடைவெளி விட்டுள்ளதால், பிற பகுதிகளில் இருந்து வரத்து சீராகும்; முகூர்த்த சீசன் என்பதால் முருங்கையின் தேவையும் கூடுதலாகவே இருக்கும். இதனால், அதிக விலை சரிவு ஏற்படாது என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.