/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கைக்கு எட்டுவது பாதி சம்பளம்தான் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வேதனை
/
கைக்கு எட்டுவது பாதி சம்பளம்தான் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வேதனை
கைக்கு எட்டுவது பாதி சம்பளம்தான் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வேதனை
கைக்கு எட்டுவது பாதி சம்பளம்தான் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வேதனை
ADDED : டிச 08, 2025 05:27 AM

திருப்பூர்: தமிழ்நாடு கொசு ஒழிப்பு பணியாளர் சங்க (டி.பி.சி. சங்கம்) திருப்பூர் மாவட்ட அமைப்பு குழு கூட்டம், ஊத்துக்குளி ரோட்டிலுள்ள ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. மங்கையர்கரசி தலைமை வகித்தார். டி.பி.சி. சங்க மாநில தலைவர் ரவீந்திரநாத், கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில பொதுச் செயலாளர் சதீஷ், துணை தலைவர் ரமேஷ் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு இ.எஸ்.ஐ. - பி.எப். திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அடையாள அட்டை மற்றும் சீருடை வழங்கவேண்டும். திருப்பூர் மாநகராட்சியில், கொசு புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு, ஒப்பந்ததாரர்கள், அரசு நிர்ணயித்த ஊதியத்தில் பாதியே கொசு புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு வழங்குகின்றனர். ஆகவே, இந்த முறையை கைவிட வேண்டும். கலெக்டரின் உத்தரவுப்படி தினக்கூலி வழங்கவேண்டும்.
இவ்வாறு, கூட்டத்தில் கோரிக்கைகளைவிளக்கி பேசினர்.