/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகனை மீட்டுத்தாருங்கள்; எஸ்.பி.,யிடம் தாய் மனு
/
மகனை மீட்டுத்தாருங்கள்; எஸ்.பி.,யிடம் தாய் மனு
ADDED : அக் 18, 2024 06:39 AM
திருப்பூர் : காங்கயம், கடலை காட்டுப்புதுாரை சேர்ந்த சக்தி கனி என்பவர் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில், ''எனது இளைய மகன் தினேஷ், 17 மளிகைக்கடை நடத்தி வருகிறார்.
கடைக்கு வந்த அவிநாசிபாளையம் போலீசார் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் உள்ளதா என்று அறிய சோதனை செய்வதாக தெரிவித்தனர். பின், சோதனையில் கடையில் ஒன்றுமில்லை. எனது மகனை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று தாக்கியுள்ளனர். காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் உள்ளார்.
மீண்டும் மருத்துவமனைக்கு வந்த போலீசார், மகனை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபடும் அவிநாசிபாளையம் போலீசார் மீது நடவடிக்கை எடுத்து மகனை மீட்டு தர வேண்டும்'' என்று கூறப் பட்டுள்ளது.
அவிநாசிபாளையம் போலீசாரிடம் கேட்டபோது, இந்தக் குற்றச்சாட்டை மறுத்தனர்.