/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பை மேடு திணறும் வாகன ஓட்டுநர்கள்
/
நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பை மேடு திணறும் வாகன ஓட்டுநர்கள்
நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பை மேடு திணறும் வாகன ஓட்டுநர்கள்
நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பை மேடு திணறும் வாகன ஓட்டுநர்கள்
ADDED : ஜன 07, 2025 02:01 AM
உடுமலை,; தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், நகர நுழைவாயிலில் கொட்டப்படும் கழிவுகளால், அப்பகுதி முழுவதும், துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு நிரந்தரமாகியுள்ளது.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை உடுமலை நகரம் வழியாக செல்கிறது. நகர எல்லையில், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் குப்பை தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது.
குறிப்பாக, நகர எல்லையிலுள்ள, ராஜவாய்க்கால் பள்ளம், ராகல்பாவி பிரிவு ஆகிய இடங்களில், கட்டட கழிவுகள், மழை நீர் வடிகால் அமைப்புகளில் கொட்டப்படுகிறது. இதனால், வடிகால் அமைப்பு முற்றிலுமாக காணாமல் போயுள்ளது.
மேலும், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு, ரோட்டை விட்டு இறங்கும் வாகனங்கள் அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள, குப்பைகளால், நிலை தடுமாறி, விபத்து ஏற்படுகிறது.
ராஜவாய்க்கால் பாலம் முடிந்ததும், ரோட்டிலேயே கழிவுகள் பறக்கும் அளவுக்கு, அப்பகுதி குப்பை கிடங்காக மாற்றப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில், வெள்ள நீர் ரோட்டை கடந்து செல்லும் பாலங்களின் இருபுறங்களும் குப்பையால் மேடாகியுள்ளது. இது குறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவிக்கப்பட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அங்கு முகாமிடும், நாய்களின் கூட்டத்தால், இருசக்கர வாகன ஓட்டுநர்கள், இரவு நேரங்களில், விபத்துக்குள்ளாகின்றனர்.
உடுமலை நகருக்கு வரும் வாகனங்களை, துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் வரவேற்கும் அவல நிலைக்கு, முற்றுப்புள்ளி வைக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.