/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை அகற்ற மாற்றுவழி அவசியம்: முதல்வருக்கு எம்.பி.சுப்பராயன் கடிதம்

ADDED : நவ 13, 2025 10:22 PM
திருப்பூர்: திருப்பூர், எம்.பி., சுப்ப ராயன், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று அனுப்பிய கடிதம்:
திருப்பூர் மாநகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில், குப்பைகள் அகற்றப்படாமல், தேங்கிவருகின்றன. மாநகரில் சேகரமாகும் குப்பைகளை, சுற்றுப்பகுதிகளில் எந்த இடத்திலும் கொட்டமுடியாத நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.
விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், கிராமப்புற மக்கள், தங்கள் பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதற்கு விடாமல் தடுக்கின்றனர். மக்களின் இத்தகைய நடவடிக்கைகள் நியாயமானதுதான். இதனால், நகரம், கிராமம் என எல்லா இடங்களிலும் குப்பை குவிந்துகொண்டே வருகிறது. மாநகராட்சி நிர்வாகம், கையறு நிலையில் தத்தளிக்கிறது.
இடுவாய், சின்னக்காளிபாளையத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிராக, கடுமையான போராட்டங்கள் வெடித்துள்ளன. எனவே, அங்கு குப்பை கொட்டுவது, நடைமுறை சாத்தியமில்லாதது.
எனவே, அதனை கைவிட்டுவிட்டு அந்த மாற்று வழிகளை தேடவேண்டும். குப்பை பிரச்னையில் இதே நிலை நீடிப்பது நல்லதல்ல. போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, திருப்பூர் மாநகராட்சியில் தொடரும் குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.