காவிரி தீர்ப்பு நடைமுறைப்படுத்த எம்.பி.க்களுக்கு வலியுறுத்தல்
காவிரி தீர்ப்பு நடைமுறைப்படுத்த எம்.பி.க்களுக்கு வலியுறுத்தல்
UPDATED : நவ 17, 2026 09:19 PM
ADDED : நவ 17, 2026 09:14 PM
திருப்பூர்: தமிழ்நாடு விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி அறிக்கை:
தமிழகத்துக்கு நீர் பங்கீடு வழங்குவது குறித்து காவிரி நதி நீர் ஆணையம் பிறப்பித்த சட்டரீதியான தீர்ப்பு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த தீர்ப்பு ஒரு ஏட்டுச் சுரைக்காய் போலத் தான் உள்ளது. இது குறித்து, 28 ஆண்டுகால சட்டப் போராட்டமும் அதன் பின்னர் 8 ஆண்டுகள் என இந்த 36 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தவே முடியாமல் உள்ளது.
மாதாந்திர அடிப்படையிலான நீர்ப்பங்கீடு என்ற அம்சம் தீர்ப்பில் இடம் பெற்றிருக்கும் வரை கர்நாடகாவின் வடிகாலாகவே தமிழகமும் புதுச்சேரியும் இருக்கும். தினந்தோறும் நீர்ப்பங்கீடு என்ற இலக்கை முன்னிறுத்தி வழக்கு நடத்தியிருக்க வேண்டும். அதற்கான தீர்ப்பைப் பெற்றிருந்தால் இரு மாநில உறவும் கெடாது. இரு மாநிலங்கள் இடையே மோதல் போக்கும் ஏற்படாது. நாட்டின் இறையாண்மையும், ஒருமைப்பாடும் கேள்விக்குறியாக மாறாது.
இப்பிரச்னையில், எதற்காக 2033ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக ஒரு மறுசீராய்வு மனுவை காவிரி நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அது ஏற்றுக் கொள்ளப்பட்டால் வரவேற்கலாம். மறுத்தால் உச்சநீதிமன்றத்தை நாடலாம். அங்கும் தீர்வு கிடைக்காவிட்டால் தமிழகத்தின் 40 எம்.பி.க்களும் பார்லிமென்டில் ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
