/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மல்டி பிராண்ட் ஜூவல்லரி திருப்பூரில் கண்காட்சி துவக்கம்
/
மல்டி பிராண்ட் ஜூவல்லரி திருப்பூரில் கண்காட்சி துவக்கம்
மல்டி பிராண்ட் ஜூவல்லரி திருப்பூரில் கண்காட்சி துவக்கம்
மல்டி பிராண்ட் ஜூவல்லரி திருப்பூரில் கண்காட்சி துவக்கம்
ADDED : ஜூன் 21, 2025 12:47 AM

திருப்பூர், : திருப்பூரில் முதன்முறையாக மல்டி பிராண்ட் ஜூவல்லரி கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று துவங்கியது.
க்ளவுட் நைன் ஈவென்ட் நிறுவனம் சார்பில் கரூரில் மல்டி பிராண்ட் ஜூவல்லரி கண்காட்சி வெற்றிகரமாக நடந்தது. மல்டி பிராண்ட் ஜூவல்லரி கண்காட்சி மற்றும் விற்பனை திருப்பூரில் முதன்முறையாக துவங்கியது. அவிநாசி ரோடு, ராக்கியாபாளையம் பிரிவு அருகே, வாரணாசி மல்டி பிளக்ஸ் அருகில் உள்ள கருணையம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றுவரும் கண்காட்சி நாளை நிறைவு பெறுகிறது. கண்காட்சியில், சென்னை, ைஹதராபாத், கோவை, ஈரோடு, திருப்பூர் முதலிய நகரங்களைச் சேர்ந்த பி.எம்.ஜே., ஜெ.சி.எஸ்., ஜெ.ஜெ., டயமண்ட், என்.ஏ.சி., விஷ்வா, தேவ்ஜி, கே.ஆர்.பி.எஸ்., உள்ளிட்ட முன்னணி ஜூவல்லரி நிறுவனங்கள், அரங்குகளை அமைத்துள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் பிரத்யேக சில சிக்னேச்சர் ரகங்களை அறிமுகப்படுத்தி, சிறப்பு சலுகைகளை வழங்குகின்றனர். நேற்று கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளை பார்வையிட்டும், வாங்கியும் வாடிக்கையாளர்கள் சென்றனர்.
''இன்றும் நாளையும் புத்தம்புது நகைகளை காட்சிப்படுத்துவதோடு, சில கூடுதல் சலுகைகளும் வழங்க ஆயத்தமாகியுள்ளோம். மேலும் சில நகரங்களில் கண்காட்சியை நடத்தவுள்ளோம். விபரங்கள் பெற 77095 68777 என்ற எண்ணில் அழைக்கலாம்'' என்று க்ளவுட் நைன் ஈவென்ட்ஸ் நிர்வாக இயக்குனர் நித்யா கூறினார்.