/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி கூட்டம் களேபரம்! சொத்து வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு; மேயரை அ.தி.மு.க.,வினர் முற்றுகை
/
மாநகராட்சி கூட்டம் களேபரம்! சொத்து வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு; மேயரை அ.தி.மு.க.,வினர் முற்றுகை
மாநகராட்சி கூட்டம் களேபரம்! சொத்து வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு; மேயரை அ.தி.மு.க.,வினர் முற்றுகை
மாநகராட்சி கூட்டம் களேபரம்! சொத்து வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு; மேயரை அ.தி.மு.க.,வினர் முற்றுகை
ADDED : நவ 29, 2024 07:14 AM

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில், சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேயரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் நடந்த நிலையில், தீர்மானங்கள் அனைத்து விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி கூட்டம் நேற்று காலை கூட்டரங்கில் நடந்தது. மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர். சொத்து வரி உயர்வைக் கண்டித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து வந்து கலந்து கொண்டனர். கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து விளக்கி மேயர் பேசத்துவங்கினர். மேயர் பேசத் துவங்கிய உடனே, அ.தி.மு.க., குழு தலைவர் அன்பகம் திருப்பதி எழுந்து, 'மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு ரத்து செய்யக் கோரி, அளித்த கடிதம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுமக்கள், தொழில் துறையினர், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பையும் பாதிக்கும் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும்' என்று பேசத் துவங்கினார்.
'கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசும் போது தங்கள் கருத்தை தெரிவிக்கலாம். சொத்து வரி உயர்வு பிரச்னை மீதான நடவடிக்கை குறித்து விளக்கம் தரப்படும்' என்று மேயர் தெரிவித்து தனது உரையைத் தொடர்ந்தார்.
அ.தி.மு.க., எதிர்ப்புதி.மு.க.,வும் பதிலடி
அ.தி.மு.க., வினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த போது, தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மேயர் இருக்கை முன் சென்று நின்று தொடர்ந்து கோஷம் எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தனது உரையை பாதியில் நிறுத்திய மேயர் அவர்களுடன் தொடர்ந்து பேசியும் பயனில்லை. கூட்ட தீர்மானங்கள் வாசிக்குமாறு மேயர் தெரிவித்தார். தீர்மானம் வாசிக்கத் துவங்கிய போது, அதற்கு இ.கம்யூ., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க., கவுன்சிலர்கள் தீர்மானங்களுக்கு ஆதரவாக மேஜையைத் தட்டினர். இதனால் நீண்ட நேரம் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.
எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மேயர் இருக்கை முன் தரையில் அமர்ந்து, தலையில் முக்காடு போட்டுக் கொண்டு கோஷமிட்டனர் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்து, கூட்டத்தை நிறைவு செய்வதாக மேயர் அறிவித்தார்.
மன்ற கூட்டரங்கில், போராட்டம் நடத்திய அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பின்னர் ரோடு மறியல் செய்தனர். தி.மு.க., கூட்டணியைச் சேர்ந்த கம்யூ., மற்றும் காங்., கவுன்சிலர்களும் நேற்று சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், சாலைமறியலும் மேற்கொண்டனர்.