/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுகாதார நிலையத்தை திறக்க மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
சுகாதார நிலையத்தை திறக்க மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 29, 2025 03:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்; அவிநாசி கவுண்டம்பாளையம் மா.கம்யூ., கிளை சார்பில், ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, கிளை செயலாளர் கதிர்வேல், தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் வசந்தி, நரேந்திர பிரசாத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாரப்பன், கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் காளியப்பன் உள்ளிட்ட 50க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருப்பூர் மாநகராட்சி, 15வது வார்டில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக திறந்து மக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என வலியுறுத்தப்பட்டது.

