/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மாநகராட்சி பூ மார்க்கெட் கடைகள் வாடகையை குறைக்க வேண்டும்'
/
'மாநகராட்சி பூ மார்க்கெட் கடைகள் வாடகையை குறைக்க வேண்டும்'
'மாநகராட்சி பூ மார்க்கெட் கடைகள் வாடகையை குறைக்க வேண்டும்'
'மாநகராட்சி பூ மார்க்கெட் கடைகள் வாடகையை குறைக்க வேண்டும்'
ADDED : பிப் 20, 2025 11:54 PM
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான பூ மார்க்கெட் வளாகம், ஈஸ்வரன் கோவில் வீதியில் செயல்படுகிறது. இங்கு 200 கடைகள் உள்ளன.
பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் சுலைமான் கூறியதாவது:
எங்கள் சங்க உறுப்பினர்கள், பூ மார்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகளின் வாடகையை குறைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
தற்போது பூக்கள் விற்பனை பல்வேறு காரணங்களால் சரிந்து விட்டது. முன்னர் போல் வியாபாரமோ, உரிய லாபமோ கிடைப்பதில்லை.
பலரும் நீண்ட காலமாக இதே தொழிலில் ஈடுபட்டுள்ளதாலும், வேறு எந்த தொழிலும் தெரியாது என்பதாலும், இதைக் கைவிட முடியாமல் தொடர்ந்து செய்து வருகிறோம்.
தற்போதைய நிலை, அடிப்படையான வாழ்வாதாரமே பாதிக்கும் நிலையில் உள்ளது. எங்கள் நிலையைக் கருதி, மார்க்கெட் கடைகளின் வாடகையை குறைக்க வேண்டும்.
ஆண்டுதோறும் உயர்த்தும் அடிப்படையில் தற்போது கடைகளுக்கான வாடகை நடப்பாண்டும் அதிகரிக்கும் நிலை உள்ளது. இது குறித்து அனைத்து வியாபாரிகளின் வேண்டுகோளை ஏற்று, மார்க்கெட் ஒப்பந்தாரர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினரையும் நேரில் சந்தித்து எங்கள் கோரிக்கையை வலியுறுத்த உள்ளோம்.

