/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகராட்சி பூங்கா தரைதளம் பராமரிப்பு இல்லை; சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
/
நகராட்சி பூங்கா தரைதளம் பராமரிப்பு இல்லை; சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
நகராட்சி பூங்கா தரைதளம் பராமரிப்பு இல்லை; சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
நகராட்சி பூங்கா தரைதளம் பராமரிப்பு இல்லை; சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
ADDED : ஏப் 29, 2025 09:15 PM

உடுமலை; உடுமலை அண்ணா பூங்காவில், குழந்தைகள் விளையாடும் பகுதிகளில் தரைதளத்தை முறையாக பராமரிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை ராஜேந்திரா ரோட்டில், அண்ணா விளையாட்டு பூங்கா உள்ளது. இப்பூங்கா பல ஆண்டுகளாக செயல்பாடில்லாமல், தற்போது நகராட்சியால் புதுப்பிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.
பூங்காவில் நடைபயிற்சி செய்வதற்கான இடவசதி, குழந்தைகள் விளையாடும் சறுக்கல், சீசா, உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் அமர்ந்து இளைப்பாறுவதற்கு இருக்கை வசதிகள், பொழுதுபோக்கிற்கு ரேடியோ அறை உள்ளிட்டவையும் உள்ளது. காலையில், 7:00 மணி முதல், 9:00 மணி வரையிலும், மாலை, 4:00 முதல் 8:00 மணி வரையிலும் பூங்கா திறக்கப்படுகிறது.
மகளிர் சுய உதவிக்குழுவினர், பூங்கா கண்காணிப்பு பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் குழந்தைகள், முதியவர்கள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்வோர் என பலரும் இங்கு வருகின்றனர்.
குறிப்பாக, தற்போது பள்ளி விடுமுறை துவங்கியுள்ளதால், பூங்காவிற்கு வரும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
ஆனால், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் இருக்கும் பகுதியில் முட்செடிகள் முளைத்தும், கற்கள் குவியலாகவும் இருக்கிறது. முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
இதனால் ஓடியாடி விளையாடும் குழந்தைகள், அடிக்கடி அப்பகுதிகளில் விழுந்து காயமடைகின்றனர். நகராட்சி நிர்வாகம் முட்செடிகளை அகற்றி, பூங்காவின் தரைதளத்தை வேண்டுமென குழந்தைகளின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.