/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி எச்சரிக்கை
/
ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி எச்சரிக்கை
ADDED : மார் 20, 2025 11:35 PM

உடுமலை,: உடுமலை பஸ் ஸ்டாண்ட் மற்றும் பிரதான ரோடுகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
உடுமலை பஸ் ஸ்டாண்ட்டில், பயணியர் அமரும் பகுதி மற்றும் நடை பாதைகள், வணிக வளாகத்தில் முன் பகுதியிலுள்ள வழித்தடத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பஸ்கள் நிற்கும் பகுதிகளிலும் அதிகளவு தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்பட்டு, பஸ் ஸ்டாண்ட் முழுவதும் கடை வீதியாக மாற்றப்பட்டுள்ளது.
அதே போல், பைபாஸ் ரோடு, பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, ராஜேந்திரா ரோடு, வெங்கடகிருஷ்ணா ரோடு, கல்பனா ரோடு என அனைத்து ரோடுகளையும் ஆக்கிரமித்து, தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்பட்டு, நகரில் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் அதிகரித்து வருகிறது.
ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், நகராட்சி சார்பில் அகற்றப்படும் என நகராட்சி கமிஷனர் எச்சரித்துள்ளார்.
அறிவித்தபடி, பஸ் ஸ்டாண்ட் மற்றும் பிரதான ரோடுகளில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மீண்டும் கடைகள் அமைக்காதபடி, நகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் கண்காணிக்க வேண்டும்.