sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போலீசை திணறடிக்கும் கொலை வழக்குகள்; ஆண்டுகள் கடந்தும் கண்டறியப்படாத குற்றவாளிகள்

/

போலீசை திணறடிக்கும் கொலை வழக்குகள்; ஆண்டுகள் கடந்தும் கண்டறியப்படாத குற்றவாளிகள்

போலீசை திணறடிக்கும் கொலை வழக்குகள்; ஆண்டுகள் கடந்தும் கண்டறியப்படாத குற்றவாளிகள்

போலீசை திணறடிக்கும் கொலை வழக்குகள்; ஆண்டுகள் கடந்தும் கண்டறியப்படாத குற்றவாளிகள்

1


ADDED : ஏப் 18, 2025 07:01 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 07:01 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் நடந்த பல்வேறு கொலை சம்பவங்கள், போலீசாரைத் திணறடித்துவருகின்றன. ஆண்டுக்கணக்காகியும் குற்றவாளிகளைக் கண்டறிய முடியவில்லை.

பல்லடம் அருகே சேமலைக் கவுண்டம்பாளையத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தெய்வசிகாமணி, 78, மனைவி அலமேலு, 75. மகன் செந்தில்குமார், 46 ஆகிய மூன்று பேர், 2024 நவ., 28ம் தேதி இரவு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவிநாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொடூர கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படை மூலமாக பல கட்ட விசாரணை நடத்தியும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. கொலை நடந்து, நான்கு மாதங்களுக்கு மேலாகியும், கொலையாளிகளை நெருங்க முடியவில்லை.

கடந்த மாதம் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. கடந்த, இரு வாரங்களாக, இரண்டு டி.எஸ்.பி., எட்டு இன்ஸ்பெக்டர் அடங்கிய தனிப்படை குழுவினர் விசாரித்து வருகின்றனர். இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது.

இதேபோல், மாவட்டம் முழுவதும் பல்வேறு கொலை வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிய முடியாத நிலை உள்ளது.

மாநகர்


திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அனுப்பர்பாளையம், வேலம்பாளையம், நல்லுார் போலீஸ் ஸ்டேஷன் என, மூன்று பகுதியில் நடந்த கொலை வழக்கில் எவ்வித முன்னேற்றம் இல்லாமல் உள்ளது.

* 2020 நவ., மாதத்தில், திருப்பூர், பொம்மநாயக்கன்பாளையத்தில் சுப்பிரமணி, 50 என்பவரை கொலை செய்து, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இவ்வழக்கில், குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் என, பலரிடம் விசாரணை நடந்தது. கடந்த, ஐந்து ஆண்டுகளாக இவ்வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. நிலம் விற்பனையில் பிரச்னையா, பணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து தெரியவில்லை.

கொலையானவர் யார்?


* 2021 நவ., 9ம் தேதி, திருப்பூர், 15 வேலம்பாளையம், சோளிபாளையம் காட்டுப் பகுதியில் கடந்த ஆண் சடலம் கிடந்தது. வேலம்பாளையம் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். 40 முதல், 45 வயது மதிக்கதக்க, அந்நபரின் உடலில், எட்டு இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயம் இருந்தது. கொலையான நபரை கண்டறிய போலீசார், சடலத்தை போட்டோவாக அச்சிட்டு, மாநகர பகுதியில் ஒட்டியும், ஆட்டோ மூலமாக பிரச்சாரம் செய்தனர். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை.

* 2022 பிப்., 7ம் தேதி, திருப்பூர் - தாராபுரம் ரோடு பொல்லிக்காளிபாளையம் அருகே ரோட்டோரம் சாக்கடை கால்வாய்க்குள் சூட்கேஸ் கிடந்தது. போலீஸ் விசாரணையில், 24 வயது பெண்ணின் சடலம் இருந்தது. 'சிசிடிவி' பதிவில், டூவீலரில் வந்த, இருவர் 'சூட்கேஸ்' பெட்டியை போட்டு சென்றதும், கொல்லப்பட்ட பெண் அசாம் மாநிலத்தை சேர்ந்த, நேகா, 24 என்பதும் தெரிந்தது. கொலை தொடர்பாக, கொலையான கணவர் அபிஜித், நண்பர் ஜெயலால் சவுராவை தேடினர். ஒசூரில் ஜெயலால் சவுராவை, 27 போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கணவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். அசாம் உள்ளிட்ட மாநிலத்துக்கு தனிப்படையினர் தேடிச்சென்று அபிஜித்தை பிடிக்க பிடியாமல் திரும்பினர். இதுவரை, அவர் போலீசிடம் சிக்கவே இல்லை.

தடயம் கிடைக்கவில்லை

புறநகர் பகுதியில் நடந்த கொலை வழக்குகளில் தடயங்கள் கிடைக்காததால் போலீசார் திணறி வருகின்றனர்.* 2020 நவ., மாதத்தில், காங்கயம் அருகே மருதுறை, பாரதிபுரத்தில் வள்ளியம்மாள், 74 என்பவர் தோட்டத்தில் வீட்டில் வசித்து வந்தார். அவரை நள்ளிரவு கட்டையால் தாக்கி கொலை செய்து, 11 சவரன் நகை, 10 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.* 2021 டிச., 15ம் தேதி, காங்கயம், ரங்கம்பாளையம், வண்ணாம்பாறை காட்டுப் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி, 72. மனைவி வள்ளியம்மாள், 68. தோட்டத்து வீட்டில் தங்கி விவசாயம் பார்த்து வந்தனர். தம்பதியை தலையில் தாக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்து, 7.5 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இவ்விரு வழக்கில் தொடர்புடைய நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. முன்விரோதம் காரணமாக நடந்ததா என்ற கோணத்தில், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உட்பட பலரிடம் விசாரணை நடந்தது. வழக்கில் சரியான தடயம் கிடைக்காத காரணத்தால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் உள்ளது.








      Dinamalar
      Follow us