/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அயர்னிங் நிறுவனத்தில் கொலை: ஒடிசாவை சேர்ந்தவருக்கு வலை
/
அயர்னிங் நிறுவனத்தில் கொலை: ஒடிசாவை சேர்ந்தவருக்கு வலை
அயர்னிங் நிறுவனத்தில் கொலை: ஒடிசாவை சேர்ந்தவருக்கு வலை
அயர்னிங் நிறுவனத்தில் கொலை: ஒடிசாவை சேர்ந்தவருக்கு வலை
ADDED : அக் 24, 2025 07:04 AM
திருப்பூர்: திருப்பூரில் உள்ள அயர்னிங் நிறுவனத்தில், ஒருவர் கொல்லப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக ஒடிசாவை சேர்ந்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்தவர் குருசங்கர், 36. திருப்பூர், ஸ்ரீ நகரில் அயர்னிங் நிறுவனம் நடத்தி வருகிறார். தீபாவளி கொண்டாட, 18ம் தேதி சொந்த ஊர் சென்றார்.
இந்நிலையில், நிறுவனத்தில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவது குறித்து அருகிலுள்ளவர்கள், குருசங்கர் மற்றும் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
போலீசார் அங்கு சென்று நிறுவனத்தை திறந்து பார்த்த போது, அழுகிய நிலையில், ஆண் சடலம் கிடந்தது. குருசங்கரின் நண்பரான போயம்பாளையத்தை சேர்ந்த காமராஜ், 42 என்பவர் கொலை செய்யப்பட்டதும், நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஒடிசாவை சேர்ந்த பப்பு என்பவர் கொலையில் ஈடுபட்டதும் தெரிந்தது.
போலீசார் கூறுகையில், ''பப்புவுடன் காமராஜ் பழகியுள்ளார். கடந்த 19ம் தேதி பப்புவுடன் சேர்ந்த காமராஜ் மது குடித்தார். இதை அருகில் இருப்பவர்கள் பார்த்துள்ளனர். அதன்பின், இருவரையும் பார்க்கவில்லை. போதையில் ஏற்பட்ட தகராறில் காமராஜை கொலை செய்துவிட்டு பப்பு தப்பி சென்றிருக்கலாம். அவர் பிடிபட்டால் கொலைக்கான காரணம் தெரிய வரும்'' என்றனர்.

