/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முருகம்பாளையம் ஸ்ரீமாகாளியம்மன் பொங்கல் விழா நாளை துவங்குகிறது
/
முருகம்பாளையம் ஸ்ரீமாகாளியம்மன் பொங்கல் விழா நாளை துவங்குகிறது
முருகம்பாளையம் ஸ்ரீமாகாளியம்மன் பொங்கல் விழா நாளை துவங்குகிறது
முருகம்பாளையம் ஸ்ரீமாகாளியம்மன் பொங்கல் விழா நாளை துவங்குகிறது
ADDED : டிச 29, 2025 05:25 AM
திருப்பூர்: அவிநாசி ஒன்றியம், முருகம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில், இந்தாண்டு பொங்கல் விழா, நாளை பொட்டுசாமி பொங்கல் நிகழ்ச்சி, ஊர்சுற்றி சோறு எறியும் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
இரவு, 10:30 மணிக்கு, பிள்ளையார் கோவிலில் இருந்து, கும்பம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், சிறப்பு அபிேஷக பூஜையும் நடக்க உள்ளது. வரும், 31ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜையும், இரவு கம்பத்து ஆட்டம் நிகழ்ச்சியும், இரவு, 9:30 மணிக்கு மாவிளக்கு ஊர்வலமும் நடக்கிறது.
வரும், ஜன., 1ம் தேதி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாலை கும்பத்தை நதிக்கரைக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.