/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முருகு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முத்தான சாதனை
/
முருகு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முத்தான சாதனை
ADDED : மே 18, 2025 12:25 AM

திருப்பூர், : பத்தாம் வகுப்பு, பிளஸ்1 பொதுத்தேர்வுகளில், திருப்பூர் - பி.என்., ரோடு, கூத்தம்பாளையம் பிரிவு முருகு மெட்ரிக் பள்ளி மாணவர்கள், நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பில், 490 மதிப்பெண்களுடன் யோகேஷ்வர் பள்ளி அளவில் முதலிடம்; 488 மதிப்பெண்களுடன் குமரன் இரண்டாமிடம்; 486 மதிப்பெண்களுடன் சுபஸ்ரீ மூன்றாமிடம் பிடித்துள்ளனர். பிளஸ் 1 பொதுத்தேர்வில், 589 மதிப்பெண்களுடன் தனுஷா முதலிடம், 566 மதிப்பெண்களுடன் ஹர்ஷினி இரண்டாமிடம், 565 மதிப்பெண்களுடன் கீர்த்தனா மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.
பத்தாம் வகுப்பில், கணிதத்தில் 1 மாணவர்; அறிவியலில் 2 பேர் நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர். பிளஸ்1 தேர்வில், கணிதம், கணினி அறிவியல் பாடங்களில் தலா ஒருவர்; தமிழில் 3 பேர்; ஆங்கிலத்தில், 2; இயற்பியலில் 1 மாணவி; கணக்கு பதிவியலில் ஒரு மாணவி; கணினி அறிவியலில் 2 பேர், 99 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவியரை, பள்ளி தாளாளர் பசுபதி, முதல்வர் சசிகலா ஆகியோர் பாராட்டினர். இப்பள்ளியில் பிளஸ்1 வகுப்புக்கான அட்மிஷன் நடைபெறுகிறது. 89039 93399, 92452 74466 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.