ADDED : டிச 25, 2024 10:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலையில், அரசு இசைப்பள்ளி துவக்கவிழா, மார்கழி இசை விழா மற்றும் மாவட்ட கலை விழா நாளை நடக்கிறது.
உடுமலை நகராட்சி தாகூர் மாளிகையில், அரசு இசைப்பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா, நாளை (27ம் தேதி) மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. முன்னதாக, 3:00 மணிக்கு, மார்கழி இசை விழாவும், 6:00 மணிக்கு, மாவட்ட கலை விழாவும் நடக்கிறது.

