ADDED : ஜூலை 14, 2025 08:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை அரசு இசைப்பள்ளியின் சார்பில், சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இசை நிகழ்ச்சி நடந்தது.
உடுமலை நகராட்சி நிர்வாக அலுவலக வளாகத்தில், அரசு இசைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியின் சார்பில், சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இசைநிகழ்ச்சி நடந்தது.
இசைப்பள்ளி தலைமையாசிரியர் சரவணமாணிக்கம் தலைமையில் இந்நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மிருதங்க ஆசிரியர் லட்சுமணன், நாதஸ்வர ஆசிரியர் சாவித்ரி, பரத ஆசிரியர் பவானி நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் இந்த இசை நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். தொடர்ந்து இசைப்பள்ளியில் உள்ள படிப்புகள் குறித்து, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் இன்பகனி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.