/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தோட்டத்து வீட்டில் முதியவர் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை
/
தோட்டத்து வீட்டில் முதியவர் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை
தோட்டத்து வீட்டில் முதியவர் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை
தோட்டத்து வீட்டில் முதியவர் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை
ADDED : ஜன 20, 2025 04:51 AM
அவிநாசி : அவிநாசி அருகே தத்தனுார் ஊராட்சி, சாவக்கட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் புல்லார்சாமி, 75. நேற்று, மதியம் அவசர போலீஸ் எண், 100க்குபோன் செய்த நபர் புல்லார்சாமி மர்மமான முறையில் அவரது தோட்டத்து வீட்டில் இறந்து கிடக்கிறார் என தகவல் அளித்துள்ளார்.
அதன்பேரில், சேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்து கிடந்த புல்லார்சாமியின் உடலை கைப்பற்றி திருப்பூர் தலைமை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, ருத்ரமூர்த்தியிடம் அவரது தந்தை இறந்தது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் கூறுகையில், 'புல்லார் சாமிக்கு கடந்த சில வருடங்களாக பக்கவாதமும், வலிப்பு நோய் இருந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே, இறப்பின் தன்மை குறித்து தெரியவரும்,' என்றனர்.