/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு மேல்நிலைப்பள்ளியில் மர்ம நபர்கள் அட்டகாசம்
/
அரசு மேல்நிலைப்பள்ளியில் மர்ம நபர்கள் அட்டகாசம்
ADDED : ஜன 06, 2025 01:14 AM

உடுமலை,; மடத்துக்குளம் அருகேயுள்ள காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில், மர்ம நபர்கள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியதால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மடத்துக்குளம் அருகேயுள்ள, காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில், 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியின் பின் பகுதி வழியாக நுழைந்த மர்ம நபர்கள், மாணவர்கள் பொது உபயோகத்திற்கு பயன்படும் சின்டெக்ஸ் டேங்க், விளையாட்டு உபகரணங்கள், வகுப்பறையில் உள்ள ஜன்னல்கள், டியூப் லைட், நூற்றாண்டு நினைவு அரங்கத்தின் மேற்கூரை மற்றும் கழிப்பறையில் இருந்த குழாய்களை சேதப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து, கணியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
போலீசார் கூறுகையில், 'இரு நாட்களுக்கு முன், காரத்தொழுவு உச்சிகாளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இச்சமயத்தில் இரவு நேரத்தில் உள்ளே புகுந்த நபர்கள், பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்,' என்றனர்.

