/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிங்டம் திரைப்படத்தை கண்டித்து 'நாம் தமிழர்' கட்சியினர் முற்றுகை
/
கிங்டம் திரைப்படத்தை கண்டித்து 'நாம் தமிழர்' கட்சியினர் முற்றுகை
கிங்டம் திரைப்படத்தை கண்டித்து 'நாம் தமிழர்' கட்சியினர் முற்றுகை
கிங்டம் திரைப்படத்தை கண்டித்து 'நாம் தமிழர்' கட்சியினர் முற்றுகை
ADDED : ஆக 06, 2025 10:56 PM

திருப்பூர்; நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள தெலுங்கு திரைப்படமான, 'கிங்டம்' தமிழக திரையரங்கில் வெளியானது.
அதில், இலங்கை தமிழர்களை குற்றப்பரம்பரை போல் சித்தரித்து இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டி, இப்படத்தை திரையிட வேண்டாம் என, கூறினர்.
திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் உள்ள ஸ்ரீ சக்தி தியேட்டரை நாம் தமிழர் கட்சியினர்முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர், போராட்டத்தில் ஈடுபட்ட, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரத்ன மனோகர், மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
தியேட்டரில் படம் பார்ப்பது போல் உள்ளே சென்று, படம் ஓடி கொண்டிருந்தபோது கோஷங்கள் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முற்றுகை போராட்டத்தின் போது, கிங்டம் மற்றும் விஜய் தேவரகொண்டா போஸ்டர்களை கிழித்தனர். அப்போது, கவனிக்காமல் சீமான் போஸ்டரையும் தவறுதலாக கிழித்து விட்டனர்.