/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருச்சி சிவாவை கண்டித்து நாடார் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
திருச்சி சிவாவை கண்டித்து நாடார் சங்கம் ஆர்ப்பாட்டம்
திருச்சி சிவாவை கண்டித்து நாடார் சங்கம் ஆர்ப்பாட்டம்
திருச்சி சிவாவை கண்டித்து நாடார் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 18, 2025 11:49 PM

திருப்பூர்; முன்னாள் முதல்வர் காமராஜரை அவதுாறாக பேசிய திருச்சி எம்.பி., சிவாவை கண்டித்து, திருப்பூர் வாழ் நெல்லை, துாத்துக்குடி மாவட்ட நாடார்கள் ஐக்கிய சங்கம், அனைத்து நாடார்கள் சங்கம் மற்றும் வணிகர் சங்கங்கள் சார்பில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் வாழ் நெல்லை துாத்துக்குடி மாவட்ட நாடார்கள் ஜக்கிய சங்க பொதுச் செயலாளர் சுரேஷ்குமார் தலைமைவகித்தார். காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவர் பூமிநாதன் முன்னிலை வகித்தார்.
காமராஜரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனைகளையெல்லாம் மறைத்து, அவரது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், பேசிய திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காமராஜர் மக்கள் மன்ற தலைவர் மாதவன், தமிழ்நாடு வணிகர் சங்க செயலாளர் கணேசன் , திருப்பூர் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜன், புதிய திராவிட கழக மாநில அமைப்பு செயலாளர் இம்மானுவேல் ஆகியோர், பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், நாடார் சங்கம், வணிகர் சங்கத்தினர் திரளானோர் பங்கேற்று, திருச்சி எம்.பி., சிவாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு மாவட்ட தலைவர் வேலாயுதம் நன்றி கூறினார்.