/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாகர்கோவில் ரயில் இயக்கம் மாற்றம்
/
நாகர்கோவில் ரயில் இயக்கம் மாற்றம்
ADDED : ஏப் 14, 2025 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் பராமரிப்பு பணி காரணமாக, கோவையில் இருந்து, திருப்பூர், ஈரோடு வழியாக நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் தினசரி ரயில் (எண்:16322), வரும், 25, 26, 28, 29, 30 ஆகிய ஐந்து நாட்களுக்கு கரூரில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக இயக்கப்படும்.
வழக்கமான வழித்தடமான பாளையம், எரியோடு, திண்டுக்கல், அம்பாத்துரை, கொடை ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் செல்லாது.

