/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாகர்கோவில் ரயில் இயக்கம் மாற்றம்
/
நாகர்கோவில் ரயில் இயக்கம் மாற்றம்
ADDED : அக் 02, 2025 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திண்டுக்கல் ரயில்வே யார்டில், பராமரிப்பு பணி நடப்பதால், நாளை (4 ம் தேதி), கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் இயக்கம் மாற்றப்படுகிறது.
அதன்படி, கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (எண்:16322) வழக்கமான வழித்தடத்துக்கு மாற்றாக, கரூர் - திருச்சி, விருதுநகர், காரைக்குடி, மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
இதனால், நாளை பாளையம், எரியோடு, திண்டுக்கல், கொடை ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஸ்டேஷன்களுக்கு செல்லாது; அதே நேரம், பயணிகள் வசதிக்காக, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.