திருப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண பஜனை மடத்தில், நேற்று நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடந்தது.
சித்திரை மாதம், 7வது நாளான நேற்று, கிரஹணத்துக்கு ஒப்பான, பானு சப்தமி நிகழ்ந்தது. இந்த வைபவத்தை முன்னிட்டு, திருப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண பஜனை மடத்தில், நேற்று நாம சங்கீர்த்தனம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு துவங்கி, மதியம், 1:00 வரை, மும்பை சீனிவாசன் பாகவதர் தலைமையில், நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி நடந்தது.------
தேய்பிறை அஷ்டமி பூஜை
பெரியபாளையம் ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவிலில் நேற்று, தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள காலபைரவர் சன்னதியில், மாலை, 5:30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, அஷ்ட பைரவ கலச ஸ்தாபனம், மூலமந்திர ஜெபம், ேஹாம பூஜைகள் நடந்தன. காலபைரவர் மகா அபிேஷகம், கலசாபிேஷகம் மற்றும் அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது; பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், அலகுமலை ஆதிகைலாசநாதர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் உட்பட, சிவாலயங்களில் உள்ள பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

