/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தமிழில் பெயர்ப் பலகை; வர்த்தகருக்கு அறிவுறுத்தல்
/
தமிழில் பெயர்ப் பலகை; வர்த்தகருக்கு அறிவுறுத்தல்
ADDED : டிச 25, 2024 07:29 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆட்சிமொழி சட்ட வாரம், கடந்த 18ம் தேதி முதல் கொண்டாடப்பட்டுவருகிறது.
அரசு அலுவலர்களுக்கு தமிழில் குறிப்பு எழுதுவது குறித்த பயிற்சி; மாணவர்களுக்கு பட்டிமன்றம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று, அனைத்து வணிக அமைப்பினர் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (ஓய்வு) தேவதாஸ் தலைமை வகித்தார்.
தொழிலாளர் உதவி கமிஷனர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், 'அனைத்து வர்த்தக நிறுவனங்களும், தமிழில் பெயர் பலகை வைக்கவேண்டும்' என அறிவுறுத்தப்பட்டது.
'தொழிலாளர் துறை சார்பில் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதி வர்த்தகர்கள் மத்தியிலும் தமிழில் பெயர் பலகை வைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்' என, வர்த்தக அமைப்பினர் தெரிவித்தனர்.
'தாராபுரம், உடுமலை பகுதி வர்த்தகர்கள் மத்தியில் நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது; மற்ற பகுதிகளிலும், தமிழில் பெயர் பலகை வைப்பது குறித்து வர்த்தகர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்' என, தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

