/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நம்ம ஊரு திருவிழா' கலை நிகழ்ச்சி; 22, 23ம் தேதியில் கலைக்குழு தேர்வு
/
'நம்ம ஊரு திருவிழா' கலை நிகழ்ச்சி; 22, 23ம் தேதியில் கலைக்குழு தேர்வு
'நம்ம ஊரு திருவிழா' கலை நிகழ்ச்சி; 22, 23ம் தேதியில் கலைக்குழு தேர்வு
'நம்ம ஊரு திருவிழா' கலை நிகழ்ச்சி; 22, 23ம் தேதியில் கலைக்குழு தேர்வு
ADDED : மார் 18, 2025 11:52 PM

திருப்பூர்; நம்ம ஊரு திருவிழாவுக்கான கலைக்குழுக்கள் தேர்வு, திருப்பூர் மாவட்டத்தில், வரும் 22, 23ம் தேதிகளில் எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:
தமிழக கலை பண்பாட்டுத்துறை சார்பில், 'நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி, கோவை, தஞ்சை, வேலுார், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை, திருச்சி ஆகிய எட்டு மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. இதில், பங்கேற்க விரும்பும் கலைக்குழுக்களுக்கான தேர்வு, எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில், வரும் 22,23ம் தேதிகளில், நடைபெற உள்ளது.
நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி, புரவியாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், பறையாட்டம், பம்பை, கைச்சிலம்பாட்டம், இறை நடனம், துடுப்பாட்டம், ஜிக்காட்டம், கிராமிய பாட்டு மற்றும் பல்சுவை நிகழ்ச்சிக்கு, 22ம் தேதியும், தெருக்கூத்து, இசை நாடகம், நாடகம், கணியான் கூத்து, பொம்மலாட்டம், தோல் பாவைக்கூத்து, வில்லுப்பாட்டு, தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், கும்மி, கோலாட்டம், மரக்கால் ஆட்டம், பரத நாட்டியம், பழங்குடியினர் நடனங்களுக்கு, 23ம் தேதி தேர்வு நடைபெறும்.
கலை பண்பாட்டுத்துறையின் தேர்வுக்குழுவால், எட்டு மாவட்டங்களில் நடைபெற உள்ள சங்கமம் திருவிழாவில் நிகழ்ச்சி நடத்துவதற்கான கலைக்குழு தேர்வு செய்யப்படும். சிறப்பான நிகழ்ச்சி வழங்கும் கலைக்குழுவினர், 2026ல் நடைபெறும் சென்னை சங்கமம் விழாவில் பங்கேற்க வாய்ப்பு பெறுவர். கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட பொறுப்பாளர் 95664 73769 (சரவண மாணிக்கம்) என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.