/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது; செப்.,15க்குள் விண்ணப்பிக்கலாம்
/
இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது; செப்.,15க்குள் விண்ணப்பிக்கலாம்
இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது; செப்.,15க்குள் விண்ணப்பிக்கலாம்
இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது; செப்.,15க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 18, 2025 09:33 PM
உடுமலை; இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், நம்மாழ்வார் விருதுக்கு, வரும் செப்.,15க்குள் விண்ணப்பிக்கலாம், என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விவசாயத்தில், ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல், இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, இயற்கை மற்றும் அங்கக எரு பயன்படுத்துதல் வாயிலாக, பயிர் சாகுபடி செய்யப்படுவதோடு, மண் வளத்தையும் பாதுகாப்பது, உயிர்ம வேளாண்மை.
இதனால், மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள், அங்கக கழிவுகளை நன்றாக மட்க்கச் செய்து, அவற்றிலுள்ள ஊட்டச்சத்துக்களை மண்ணுக்கு அளிக்கிறது; பயிர்கள் கிரகித்துக்கொள்ள உதவுகின்றன.
நுண்ணுயிர்கள், ஊட்டச்சத்துகளை மெதுவாகவும், சீராகவும் வெளியிடுகின்றன. மாசற்ற சூழலில் பயிர் வளர்வதால், நச்சற்ற விளை பொருட்களை உற்பத்தி செய்யமுடியும்.
வேளாண் துறை வாயிலாக, நடப்பாண்டில் உயிர்ம வேளாண் நடைமுறைகளை பின்பற்றி, சிறப்பாக செயல்படும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில், நம்மாழ்வார் விருது வழங்கப்பட உள்ளது.
இவ்விருது பெற விரும்பும் விவசாயிகள், 'அக்ரிஸ் நெட்' இணையதளத்தில், வரும் செப்., 15ம் தேதிக்குள் பதிவு கட்டணம், ரூ.100 செலுத்தி, விண்ணப்பிக்கலாம்.
விவசாயிகள், குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பளவில் இயற்கை முறையில் விவசாய பயிர்கள் சாகுபடி செய்திருக்கவேண்டும். முழு நேர இயற்கை வேளாண் விவசாயியாக இருக்கவேண்டும்.
குறைந்தபட்சம் 3 ஆண்டுகள், இயற்கை வேளாண் உற்பத்தியில் ஈடுபட்டிருக்க வேண்டும்; உயிர்ம வேளாண்மைக்கான சான்று பெற்றிருக்கவேண்டும்.
மாவட்ட அளவிலான மதிப்பீட்டுக்குழு மற்றும் மாநில அளவிலான தேர்வுக்குழு வாயிலாக வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
வெற்றிபெறும் மூன்று விவசாயிகளுக்கு, தமிழக அரசு சார்பில், தலா 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கத்துடன், சிறந்த உயிர்ம உழவருக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும், என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.