நந்தா பொறியியல் கல்லுாரி முதலாண்டு வகுப்பு துவக்கம்
நந்தா பொறியியல் கல்லுாரி முதலாண்டு வகுப்பு துவக்கம்
ADDED : செப் 02, 2026 07:12 PM
திருப்பூர்: நந்தா பொறியியல் கல்லுாரியில், இளநிலை முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை உறுப்பினர் பானுமதி சண்முகன், சென்னை மல்டிகோர் வேர் நிறுவன முதன்மை மனிதவள அலுவலர் சசிகாந்த் ஜெயராமன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர். கல்லுாரி முதல்வர் ரகுபதி, வரவேற்றார்.
அறக்கட்டளை தலைவர் சண்முகன் பேசுகையில், ‘‘26வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நந்தா பொறியியல் கல்லுாரி, தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் மற்றும் தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளது. இதன் வாயிலாக, மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சித் தரம் உலக அளவில் உறுதி செய்யப்படுகிறது’’ என்றார்.
அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர்கள் நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி, தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் நந்தகோபால், பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் மோகன்குமார், நந்தா தொழில்நுட்ப வளாக நிர்வாக அலுவலர் வேலுசாமி ஆகியோர், வாழ்த்திப்பேசினர். பொறியியல் துறை தலைவர் திருநீலகண்டன் நன்றி கூறினார்.
