/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய தடகளத்தில் தங்கம் வென்ற வீரர்கள்
/
தேசிய தடகளத்தில் தங்கம் வென்ற வீரர்கள்
ADDED : அக் 24, 2025 12:06 AM
திருப்பூர்: ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் நடந்த தேசிய தடகளத்தில், திருப்பூர் வீரர்கள் தங்கம் உட்பட ஆறு பதக்கம் வென்றுள்ளனர்.
இந்திய தடகள சங்கம் சார்பில், கடந்த, 10 முதல் 14ம் தேதி வரை ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் 40வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
இதில், திருப்பூர் வீரர்கள் நான்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் என ஆறு பதக்கங்கள் வென்றனர்.
இதில், 16 வயது ஆண்கள் பிரிவில் தருண், மெட்லி ரிலே போட்டியில் தங்கம், 60 மீ. ஓட்டத்தில் வெண்கலம் வென்றார். 16 வயது பெண்கள் பிரிவில் வர்ஷிகா, 80 மீ. தடை தாண்டுதல் போட்டியில் தங்கம், பிரேமா பென்டத்லான் போட்டியில் வெள்ளி வென்றார். 20 வயது பெண்கள் பிரிவில் பவீனா ராஜேஷ் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம், 20 வயது ஆண்கள் பிரிவு, 400 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் விஷ்ணு ஸ்ரீ தங்கம் வென்றனர்.
தேசிய தடகளத்தில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனையருக்கு, திருப்பூர் மாவட்ட தடகள சங்கத்தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் முத்துக்குமார், துணைத்தலைவர்கள் இணைச்செயலாளர்கள், டெக்னிக்கல் கமிட்டி தலைவர் மனோகர் செந்துார்பாண்டி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.

