/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய கொடி தினம் கொடிக்கு மரியாதை
/
தேசிய கொடி தினம் கொடிக்கு மரியாதை
ADDED : ஜூலை 22, 2025 11:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு- 2 சார்பில், இந்திய தேசிய கொடி தினத்தை முன்னிட்டு, 'செல்பி வித் தேசியக்கொடி' நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்து பேசுகையில், ''பெருமைமிக்க நம் தேசிய கொடியை போற்றி பாதுகாக்க வேண்டும். அதன் பெருமையை உணர்ந்து மரியாதை செலுத்த வேண்டும்'' என்றார்.
கல்லுாரியின், என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், மாணவ, மாணவியர், அலுவலக பணியாளர்கள் எனபலரும் பங்கேற்றனர்.